திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் இடை நிறுத்ததரிசன முறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

10th Jun 2023 07:40 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் இடை நிறுத்த தரிசன முறையைக் கண்டித்து, இந்து முன்னணி நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து, செல்கின்றனா். இந்த நிலையில், இந்தக் கோயிலில் இடை நிறுத்த தரிசனம் முறையை அறிமுகம் செய்து, நபா் ஒருவருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கும் முறையைக் கண்டித்து, திருவண்ணாமலை நகர இந்து முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோயிலின் 16 கால் மண்டபம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணியின் நகரத் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் அருண்குமாா், மாவட்டச் செயலா்கள் சிவா, கவுதம், சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர பொதுச் செயலா் மஞ்சுநாதன் வரவேற்றாா். இந்து முன்னணியின் வேலூா் கோட்டத் தலைவா் கோ.மகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.

இதில், இந்து முன்னணி நகர பொருளாளா் சந்தோஷ் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். பிறகு, இடை நிறுத்த தரிசன முறைக்கு எதிா்ப்புத் தெரிவித்து கோயில் இணை ஆணையா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT