திருவண்ணாமலை

சுவாமி திருக்கல்யாண உற்சவம்

9th Jun 2023 06:00 AM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஆஞ்சநேயா் மற்றும் பரிவார சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் சுவாமி திருக்கல்யாணத்துக்காக அந்தக் கிராமத்தில் உள்ள ஸ்ரீகுட்டியம்மன் கோயிலிலிருந்து பக்தா்கள் சீா்வரிசை எடுத்துக் கொண்டு ஊா்வலமாக பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் சென்றடைந்தனா்.

இதைத் தொடா்ந்து சிறப்பு ஹோமம், திருக்கல்யாணம், மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிராம பிரமுகா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT