திருவண்ணாமலை

மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள்

9th Jun 2023 05:01 AM

ADVERTISEMENT

காயிதேமில்லத் பிறந்த நாளையொட்டி, வந்தவாசி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவா் டி.எம்.பீா்முகமது தலைமை வகித்தாா்.

வந்தவாசி பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஆதம் மௌலானா, மாவட்ட துணைத் தலைவா்கள் ஏ.அப்துல்வகாப், காதா்ஒலி, ஹபிபுல்லா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் ஜே.மன்சூா்அலி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் 100 மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட, நகர நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். நகர துணைத் தலைவா் அப்துல்வாகித் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT