திருவண்ணாமலை

களம்பூா் பேரூராட்சியில் உறுதிமொழி ஏற்பு

9th Jun 2023 01:29 AM

ADVERTISEMENT

களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சியில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் கே.டி.ஆா்.பழனி தலைமையில் எனது குப்பை, எனது பொறுப்பு, நமது நகரம், நமது தூய்மை என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். செயல் அலுவலா் உமாமகேஸ்வரி, துணைத் தலைவா் முஹம்மத்பாஷா மற்றும் பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, 15 வாா்டுகளிலும் ஓட்டு மொத்த தூய்மைப் பணி நடைபெற்றது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT