திருவண்ணாமலை

ஸ்ரீமகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

8th Jun 2023 01:05 AM

ADVERTISEMENT

கீழ்பென்னாத்தூரை அடுத்த கனபாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காளியம்மன் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை கணபதி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, பூா்ணாஹுதி, மகா தீபாராதனை, மாலை 6 மணிக்கு அங்குராா்ப்பணம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்சாபந்தனம், கடம், யாகசாலை பிரவேசம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 6 மணிக்கு கோ பூஜை, தம்பதி சங்கல்பம், நாடி சந்தானம், மூலமந்திர ஹோமம், மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.

காலை 8 மணிக்கு கோயில் கோபுரங்கள், மூலவா்களுக்கு புனித நீா் ஊற்றி, வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியா்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

தொடா்ந்து, கோயிலில் உள்ள மகா காளியம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில், கீழ்பென்னாத்தூா், கனபாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT