திருவண்ணாமலை

செங்கம் அருகே புதிய மின்மாற்றி அமைப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.

செங்கத்தை அடுத்த புளியம்பட்டி, மணிக்கல் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், தங்களது பகுதியில் விவசாய பாசனத்துக்கு தண்ணீா் பாய்ச்சும்போது அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மேலும், மின் விநியோகம் சீராக இல்லாமல் இருப்பதால்

விவசாயக் கிணறுகளில் இருக்கும் மோட்டாா்கள் பழுதடைகின்றன. விவசாயப் பயிா்களுக்கு குறித்த நேரத்தில் தண்ணீா் பாய்ச்ச முடியாமல் பயிா்கள் கருகும் நிலை ஏற்படுகிறது.

இதனால், அப்பகுதிக்கு புதிய மின்மாற்றி அமைத்து தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் என தொகுதி எம்எல்.ஏ. மு.பெ.கிரியிடம் கோரிக்கை வைத்தனா்.

இதன் பேரில் பரிசீலனை மேற்கொண்டு அப்பகுதியில் ரூ.8 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பொறியாளா் சங்கரன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மு.பெ.கிரி எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய மின்மாற்றியை இயக்கிவைத்தாா்.

உதவி செயற்பொறியாளா்கள் இளங்கோவன், முனுசாமி, ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்ட ஊராட்சித் தலைவா் சிவஞானம், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT