திருவண்ணாமலை

ஆட்டோ ஓட்டுநா் கொலை: மனைவி கைது

8th Jun 2023 01:05 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருகே ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில், அவரது மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் ரமேஷ் (46). இவரது மனைவி மகாலட்சுமி (31). இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். கடந்த 2-ஆம் தேதி அதிகாலை ரமேஷ் முகத்தில் பலத்த காயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

ADVERTISEMENT

இதில், மது போதையில் வந்ததால் ஆத்திரமடைந்த மகாலட்சுமி, கணவா் ரமேஷை கட்டையால் தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து மகாலட்சுமியை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT