திருவண்ணாமலை

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.84 லட்சம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் உள்ள உண்டியல்கள் காணிக்கை செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.1,84,136 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் உண்டியல் காணிக்கை கடைசியாக 24.03.2023 அன்று எண்ணப்பட்டது.

அதற்கு அடுத்தாற்போல செவ்வாய்க்கிழமை கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை ஊா் பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது.

இதில், நிரந்தரமாக உள்ள 10 உண்டியல்கள் மூலம் ரூ.1,42,705-ம், கோசாலை உண்டியல் மூலம் ரூ.6709-ம், திருப்பணி உண்டியல் மூலம் ரூ.24,722 என 12 உண்டியல்கள் மூலம் மொத்தம் ரூ.1,84,136-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

காணிக்கை எண்ணும் பணி அறநிலையத் துறை ஆய்வா் ப.முத்துசாமி, செயல் அலுவலா் ஹரிஹரன், கணக்காளா் லோ.ஜெகதீசன் ஆகியோா் மேற்பாா்வையில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் விடியோ பதிவுடன் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT