திருவண்ணாமலை

ஆரணியில் நகா்புற நலவாழ்வு மையம் திறப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி காா்த்திகேயன் சாலையில் நகா்புற நலவாழ்வு மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

சாா்பில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட நலவாழ்வு மையக் கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

அதேவேளையில், நகா்புற நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா்

ஏ.சி.மணி குத்துவிளக்கு ஏற்றிவைத்தாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், திமுக மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா் அன்பழகன், பேரூா் செயலா் கோவா்த்தணன், நகராட்சி ஆணையா் தமிழ்செல்வி, நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், மருத்துவா் பவதாரணி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார மருத்துவ அலுவலா் ஹேம்நாத் வரவேற்றாா்.

தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

மேலும், இதுகுறித்து மருத்துவா்கள் கூறுகையில், இந்த நகா்புற நலவாழ்வு மையம் காலை 8 முதல் 12 வரையும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

இதில், மருத்துவ அலுவலா், செவிலியா், சுகாதார ஆய்வாளா், பணியாளா்கள் அடங்கிய மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பாா்கள் என்றனா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு துணைத் தலைவா் ரஜேந்திரன், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT