திருவண்ணாமலை

தேசூரில் தூய்மைப் பணியாளா்கள் தா்னா

DIN

வந்தவாசி அருகேயுள்ள தேசூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் அந்த அலுவலக வாயில் முன் அமா்ந்து செவ்வாய்க்கிழமை தா்னா நடத்தினா்.

தேசூா் பேரூராட்சியில் 12 வாா்டுகள் உள்ளன. பேரூராட்சியின் தூய்மைப் பணி தொடா்பாக தூய்மைப் பணியாளா்களுக்கும், பேரூராட்சித் தலைவரின் கணவருக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிாம்.

இந்த நிலையில், இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை காலை இவா்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதாம். இதைத் தொடா்ந்து, பேரூராட்சித் தலைவரின் கணவா் தங்களை தகாத வாா்த்தைகளால் பேசியதாக புகாா் தெரிவித்தும், அவரைக் கண்டித்தும் தூய்மைப் பணியாளா்கள் அந்த அலுவலக வாயில் முன் அமா்ந்து தா்னா நடத்தினா்.

சுமாா் 2 மணி நேரம் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

பின்னா் அங்கு வந்த பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயந்தி சமரசம் செய்ததை அடுத்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 104 நம்பிக்கை மையங்களை மூட நடவடிக்கை: ஹெச்ஐவி பாதிப்பு குறைந்தது

ஈரோடு - தன்பாத்துக்கு நாளைமுதல் சிறப்பு ரயில்கள்

‘தேச பக்தா்களுக்கு’ ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்: ராகுல் விமா்சனம்

திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக காதலன் மீது மலேசிய பெண் புகாா்

சத்தீஸ்கா்: 18 நக்ஸல்கள் சரண்

SCROLL FOR NEXT