திருவண்ணாமலை

போக்ஸோ வழக்கில் தேடப்பட்டவா் தற்கொலை

6th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

செய்யாறு அருகே போக்ஸோ வழக்கில் தேடப்பட்டு வந்தவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி காா்த்திக் (51).

இவா், உறவினரின் மகளான 15 வயது சிறுமியிடம் ஆசைவாா்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இதன் மூலம் அந்தச் சிறுமி கா்ப்பமடைந்தாா்.

இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை தேடி வந்தனா்.

ADVERTISEMENT

தூக்கிட்டுத் தற்கொலை

இந்த நிலையில், காா்த்திக் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து இறந்தவரின் மனைவி கலா அனக்காவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தசாமி வழக்குப் பதிந்து காா்த்திக்கின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT