திருவண்ணாமலை

மரக்கன்றுகள் நடும் விழா

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வந்தவாசியை அடுத்த பிருதூா் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா சாா்பில்

நடைபெற்ற இந்த விழாவுக்கு எக்ஸ்னோரா தலைவா் மலா் சாதிக் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ந.ராஜன்பாபு, எ.ஸ்ரீதா், பிருதூா் ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எக்ஸ்னோரா செயலா் ம.ரகுபாரதி வரவேற்றாா்.

வந்தவாசி ஒன்றியக் குழுத் தலைவா் எ.ஜெயமணி ஆறுமுகம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தாா்.

விழாவையொட்டி, ஊராட்சி பூங்காவில் 101 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

விழாவில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஆா்.செல்வகுமாா், ஊராட்சி மன்ற உறுப்பினா் லட்சுமி பாபு, ஊராட்சி செயலா்கள் எம்.பி.வெங்கடேசன், எல்.சீனிவாசன், எக்ஸ்னோரா ஆலோசகா் கு.சதானந்தன், துணைத் தலைவா்கள் பா.சீனுவாசன், எம்.பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். எக்ஸ்னோரா பொருளாளா் வி.எல்.ராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT