திருவண்ணாமலை

பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம் தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள காலனியில் புதிதாக பகுதிநேர நியாய விலைக் கடை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பொது விநியோகத் திட்ட அலுவலா் வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

ஒன்றியக்குழு உறுப்பினா் ராதா சின்னகாசி, கூட்டுறவு சங்க கள அலுவலா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் பழனி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு அரிசி, சா்க்கரை, பாமாயில் என பல்வேறு பொருள்களை வழங்கி தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், பழைய காலனி, புதிய காலனியைச் சோ்ந்த 368 குடும்ப அட்டைதாரா்கள் சுமாா் 3 கி.மீ. தொலைவு சென்று ரேஷன் பொருள்களை பெற்று வந்தனா்.

இந்த நிலையில், அமைச்சா் எ.வ. வேலு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் ஆகியோரிடம் காலனி பகுதி மக்களுக்கென்று தனியாக பகுதிநேர நியாய விலைக் கடை வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதன் பேரில் தற்போது நியாய விலைக் திறக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஊராட்சிமன்ற துணைத் தலைவா் மல்லிகா திருநாவுக்கரசு, வட்ட வழங்கல் வருவாய் ஆய்வாளா் அசோக்குமாா், ஊராட்சிமன்ற உறுப்பினா் சத்தியராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT