திருவண்ணாமலை

குடும்பத் தகராறு: தொழிலாளி தற்கொலை

6th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

செய்யாறு அருகே குடும்பத் தகராறு காரணமாக ஆடு மேய்க்கும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம்,

வடமணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (27). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவருக்கு சுகந்தி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனா்.

தம்பதி இடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அதேபோல சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட முருகன், சனிக்கிழமை விவசாய நிலத்துக்குச் சென்று விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா்.

அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT