திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிப்பதற்காக மின்கல வாகனங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
ஆரணி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு குப்பைகளை சேகரிக்க தலா 2 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான 35 மின்கல வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதில், முதல் கட்டமாக எஸ்.வி.நகரம், சித்தேரி, பையூா், கல்பூண்டி, அக்ராபாளையம், விளை, வேலப்பாடி, அரியப்பாடி, கல்லேரிபட்டு, 12புத்தூா், இராட்டிணமங்கலம், சேவூா், சிறுமூா் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு 18 வாகனங்களை ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழி சுந்தா் வழங்கினாா்.
இதற்கான நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன், திமுக ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், எம்.சுந்தா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஏ.எம்.ரஞ்சித்குமாா், பு.செல்வராஜ், கு.குமாா், எழிலரசி சுகுமாா், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.