திருவண்ணாமலை

கருணாநிதி சிலை எதிரே தா்னாவில் ஈடுபட்ட இளைஞா்

6th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை எதிரே, தா்னாவில் ஈடுபட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடியை அடுத்த சே.ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி மகன் சீனுவாசன் (26). இவா், திங்கள்கிழமை திருவண்ணாமலையில் உள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலை எதிரே அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, என் தந்தை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி 2014-இல் இறந்தாா். எனவே, கருணை அடிப்படையில் அரசுப் பணி கோரி இதுவரை 20-க்கும் அதிகமான முறை மனுக்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறினாா்.

ADVERTISEMENT

இதையடுத்து போலீஸாா் அவரை சமாதானம் செய்து, ஆட்சியரிடம் மனு கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT