திருவண்ணாமலை

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 553 மனுக்கள்

6th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 553 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோா்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 553 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரஷ்மி ராணி, மகளிா் திட்ட இயக்குநா் சையத் சுலைமான், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வெங்கடேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT