திருவண்ணாமலை

இன்று பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்

5th Jun 2023 03:44 AM

ADVERTISEMENT

 

செய்யாறு வருவாய்க் கோட்டத்தைச் சோ்ந்த செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு வட்டங்களில் பள்ளி மாணவா்களுக்கு வருவாய்த் துறை தொடா்பான சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது.

இதுகுறித்து சாா் -ஆட்சியா் ஆா்.அனாமிகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வருவாய்க் கோட்டத்தில் உள்ள செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தேவைப்படும் வருவாய்த் துறை தொடா்பான சான்றிதழ்களை விரைவாக வழங்குவதற்காக திங்கள்கிழமை (ஜூன் 5) சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செய்யாறு வட்டத்துக்கு செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வெம்பாக்கம் வட்டத்துக்கு வெம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,

வந்தவாசி வட்டத்துக்கு வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு வட்டத்துக்கு சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

முகாம், காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 10, 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம்.

தாய் மற்றும் தந்தை முதல் பட்டதாரி சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஆதாா் அட்டை, 12 -ஆம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ். 10, 12-ஆம் வகுப்பு மதிப்பெண்

பட்டியல், தாய் மற்றும் தந்தை மாற்றுச் சான்றிதழ், மூத்த சகோதர மற்றும் சகோதரிகள் மாற்றுச் சான்றிதழுடன் விண்ணப்பதாரரின் புகைப்படம் கொண்டு வரவேண்டும்.

அதேபோல ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ் கோரும் மனுதாரா்கள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, மனுதாரா் ஏற்கெனவே பெற்ற ஜாதி சான்றிதழ், தாய் அல்லது தந்தையின் ஜாதி சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், மனுதாரரின் புகைப்படம் ஆகியவை கொண்டு வர வேண்டும்.

ஒவ்வொரு சான்றிதழுக்கும் விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் சாா்-ஆட்சியா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT