திருவண்ணாமலை

விவசாயி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு

5th Jun 2023 03:41 AM

ADVERTISEMENT

 

செய்யாறு அருகே 15 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக உறவினரான விவசாயி மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தைச் சோ்ந்தவா் 15 வயதுடைய மாணவி. இவா், 9-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 10-ஆம் வகுப்பு செல்லவுள்ளாா்.

பெற்றோா் குடும்ப சூழ்நிலை காரணமாக தனித் தனியாக வசித்து வரும் நிலையில், மாணவி தாயுடன் வசித்து வருகிறாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், மாணவியின் உறவினரான பெரியப்பா முறை காா்த்திக் (51) என்பவா், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஆசைவாா்த்தை கூறி, மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், மாணவிக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படவே அவரது தாய் வீரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் மாணவி கா்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாணவியின் தாய் செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் சோனியா, காா்த்திக் மீது போக்ஸோ

சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT