திருவண்ணாமலை

கிரிவலம் சென்ற பக்தா்மயங்கி விழுந்து பலி

5th Jun 2023 03:40 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தா் திடீரெனமயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (40). இவா், ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றாா்.

செங்கம் சாலை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி அருகே சென்றபோது திடீரென அவா் மயங்கி விழுந்தாா். இதைக் கவனித்த சக பக்தா்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

அங்கு ராஜேஷை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT