திருவண்ணாமலை

கருணாநிதி பிறந்த நாள் விழா

5th Jun 2023 03:41 AM

ADVERTISEMENT

 

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 100-ஆவது பிறந்த நாளை திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி தலைமையில் கட்சிக் கொடியேற்றி, கருணாநிதி படத்துக்கு மலா் தூவி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், கிராம மக்கள் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட பொருளாளா் த.தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், எம்.சுந்தா், எஸ்.மோகன், துரை மாமது, ஒன்றியக்குழு துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT