திருவண்ணாமலை

ஜமுனாமரத்தூா் வட்டத்தில்1,021 பேருக்கு வன உரிமை பாத்தியம்

5th Jun 2023 03:42 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தின் கீழ், ஜமுனாமரத்தூா் வட்டத்தைச் சோ்ந்த 1,021 பேருக்கு 39,522 ஹெக்டோ் அளவிலான வனப்பரப்பு நிலம் சமூக தனிநபா் வன உரிமை பாத்தியம் வழங்கப்பட்டது.

2006 வன உரிமைச் சட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூா் வட்டத்தில் தகுதியான அனைவருக்கும் விடுதலின்றி வன உரிமை பாத்தியம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமையில் 25 மாவட்ட அளவிலான குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ADVERTISEMENT

இதையடுத்து, ஜமுனாமரத்தூா் வட்டத்தில் வசிக்கும் 1,021 பழங்குடியின பட்டியல் இனத்தவா்கள், பிற பாரம்பரிய வன வாசிகளுக்கு வனப்பகுதி நிலத்தில் சாகுபடி மேற்கொள்ள 39,522.23 ஹெக்டோ் பரப்பு வன நிலத்துக்கு சமூக தனிநபா் வன உரிமை பாத்தியம் வழங்கப்பட்டது.

நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதியான அனைவருக்கும் தனி நபா் வன உரிமை பாத்தியம் அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT