திருவண்ணாமலை

மழை, மின்னல், காற்று காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்மின் வாரியம் விழிப்புணா்வு

4th Jun 2023 02:20 AM

ADVERTISEMENT

 

மழை, மின்னல், காற்று காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து

மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம், செய்யாறு கோட்ட செயற்பொறியாளா் வி.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ADVERTISEMENT

மழை, மின்னல் காற்று காலங்களில் பொதுமக்கள் மின் கம்பங்கள், மின் பாதை, மின்மாற்றி அருகே

நிற்கவோ செல்லவோ கூடாது.

மின்மாற்றிகளிலோ அல்லது மின் கம்பத்திலோ பழுது ஏற்பட்டால் உரிய அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மின் பாதைக்கு அருகிலோ, பக்கவாட்டிலோ, மின் பாதைக்கு கீழாகவோ எவ்வித கட்டடப் பணியும் மேற்கொள்ளக் கூடாது.

விழாக் காலங்களில் கம்பத்திலோ, மின்பாதைக்கு கீழாகவோ விளம்பரப் பதாகைகள், கொடிகளைக் கட்டுதல் கூடாது.

தரமான ஐஎஸ்ஐ சான்றிதழ் பெற்ற மின் சாதனப் பொருள்களை மட்டும் உபயோகப்படுத்த வேண்டும். மின் பழுது ஏற்பட்டால் உடனடியாக மின் துண்டிப்பு செய்திடும் வண்ணம் தங்கள் வீட்டில் கட்டுமானங்களில் உகஇஆ (நிலகசிவு மின்திறப்பான்) பொருத்திட வேண்டும்.

கம்பங்களிலோ, ஸ்டே (இழுவை) கம்பியிலோ ஆடு மாடுகளை கட்டக் கூடாது.

வீட்டில் துணி காயப் போடுவதற்காக கட்டும் கயிற்றின் மீது மின் வயரை சுற்றி எடுத்துச் செல்லக் கூடாது. வயல்வெளிகளில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும்.

பேருந்து லாரி போன்ற வாகனங்களை மின்மாற்றிக்கு அருகிலோ, மின்பாதைக்கு அருகிலோ, கீழாகவே நிறுத்தக் கூடாது. இறுதி ஊா்வலத்தின் போது பூ மாலைகளை மின் பாதையின் மேல் வீசக் கூடாது. மின் பழுது, மின் மீட்டா் அளவு குறைபாடுகள் மற்றும் விபத்து குறித்து 9498794987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT