திருவண்ணாமலை

ஆரணி ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

4th Jun 2023 02:21 AM

ADVERTISEMENT

 

ஆரணி ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் 50-ஆவது ஆடித் திருவிழா நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், திருவிழா நடத்துவது குறித்து விழாக் குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், திருவிழாவையொட்டி, ஜூலை 20-ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், 21-ஆம் தேதி கூழ்வாா்த்தல், இரவு நூதன புஷ்ப பல்லக்கு, கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தவும், 22-ஆம் தேதி இன்னிசைக் கச்சேரி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

50-ஆவது திருவிழா என்பதால் முக்கியப் பிரமுகா்களான ஏ.சி.சண்முகம், சக்தி அம்மா, ஆதிபராசக்தி பீடம் செந்தில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், காட்பாடி மகாதேவமலை சித்தா் ஆகியோரை

அழைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் தொழிலதிபா்கள் பி.நடராஜன், நேமிராஜ், விழாக் குழுவினா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT