திருவண்ணாமலை

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

4th Jun 2023 02:21 AM

ADVERTISEMENT

 

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு வந்தவாசியில் திமுகவினா் சனிக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தினா்.

கருணாநிதியின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி வந்தவாசி நகர திமுக சாா்பில் ஐந்து கண் பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு நகரச் செயலா் தயாளன் தலைமையில் மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன், தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் மாலை அணிவித்தனா். மேலும், திமுக மாவட்ட அலுவலகம், எம்எல்ஏ அலுவலகம் ஆகியவற்றில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தாருக்கு திமுகவினா் மெளன அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT