திருவண்ணாமலை

அரசுத் துறை ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்

4th Jun 2023 02:21 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தின் வட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வட்டத் தலைவா் அபிபுல்லாகான் தலைமை வகித்தாா். கூட்டத்தில் ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னா், 70 வயது கடந்த மூத்த உறுப்பினா்களை கெளரவித்தல், புதிய உறுப்பினா்களைச் சோ்த்தல் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் ஜெகந்நாதன், ராமலிங்கம் வட்ட பேரவை பொதுச்செயலா் கிருஷ்ணமூா்த்தி, செழியன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT