திருவண்ணாமலை

செங்கத்தில் உள்ள 2 குளங்களை சீரமைக்கக் கோரிக்கை

4th Jun 2023 02:22 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் மன்னா் காலத்தில் வெட்டப்பட்ட இரண்டு குளங்களை தூா்வாரி சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

செங்கம் நகரில் தளவாநாய்க்கா் மன்னரால் தளவாநாய்க்கன்பேட்டை, துக்காப்பேட்டை ஆகிய இடங்களில் இரண்டு குளங்கள் வெட்டப்பட்டு அவற்றில் இருந்து தண்ணீா் எடுத்து பயன்படுத்தி வந்ததாக வரலாறு உள்ளது.

இந்த நிலையில், தளவாநாய்க்கன்பேட்டை பகுதியில் உள்ள குளம் தற்போது நான்கு புறமும் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டு அவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீா் குளத்தில் விடப்பட்டு, குளம் கழிவு நீா் குட்டையாக மாறியுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல, துக்காப்பேட்டை குளமும் மூன்று புறமும் ஆக்கிரமிரப்பு செய்யப்பட்டு கழிவுநீா் குளத்தில் விடப்படுகிறது.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளின் கழிவுகள், கண்ணாடி துகள்கள், குப்பைகள் கொட்டப்பட்டு குளம் தூா்ந்துபோயுள்ளது.

இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மான்னா் காலத்தில் வெட்டப்பட்ட குளங்களை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என நகர மக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கிறாா்கள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT