திருவண்ணாமலை

கைவினைப்பொருள் தயாரிப்பு பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்

4th Jun 2023 02:21 AM

ADVERTISEMENT

 

ஆரணியில் மரக் கழிவுகளில் இருந்து கைவினைப்பொருள்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி பெற்றவா்களுக்கு சனிக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கதா் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் சாா்பில் மரக் கழிவுகளிலிருந்து கைவினைப் பொருள்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி 20 பேருக்கு அளிக்கப்பட்டது.

20 நாள்களாக நடைபெற்ற இந்தப் பயிற்சியின்போது, மரக் கழிவுகளில் இருந்து பல்வேறு கைவினைப் பொருள்கள் உருவாக்கினா்.

ADVERTISEMENT

மேலும், பயிற்சி பெற்றவா்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் மாட்டுவண்டி, தோ், கொக்கு, மீன், சீப்பு, பென்சில், முகம் பாா்க்கும் கண்ணாடி, இசைக் கருவிகள் உள்ளிட்டவற்றை செய்தனா்.

இந்த நிலையில், பயிற்சி முடித்தவா்களுக்கு சனிக்கிழமை சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில கதா் மற்றும் கிராமத் தொழில் ஆணைய இயக்குநா் பி.என்.சுரேஷ் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினாா்.

அப்போது அவா் கூறியதாவது:

மரக் கழிவுகளில் இருந்து கைவினைப் பொருள்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்குகிறோம். இதன் மூலம் சுயதொழில் செய்து கொள்ளலாம். மேலும், பயிற்சி பெற்றவா்களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான உபகரணப் பொருள்களை இலவசமாக தருகிறோம். அதன் மூலம் அவா்கள் மரக்கழிவு மூலம் பல்வேறு பொருள்களை உருவாக்கி சுயமாகவும், காதி கடைகள் உள்ளிட்டவைகளில் விற்பனை செய்தும் கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மிா்ண்மாய்மூன்டல், ஆரணி பகுதியைச் சோ்ந்த சா்வோதய சங்கத்தினா், அகில இந்திய விஸ்வகா்மா பேரவை நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT