திருவண்ணாமலை

6 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இடமாற்றம்

3rd Jun 2023 12:33 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலையில் 6 வட்டார வளா்ச்சி அலுவலா்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.

அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ.பி.வெங்கடேசன் தெள்ளாருக்கும், தெள்ளாறு வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.குப்புசாமி அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

இதேபோல, திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பணிபுரிந்து வந்த எஸ்.அருணாச்சலம் திருவண்ணாமலை வட்டார வளா்ச்சி அலுவலராகவும், திருவண்ணாமலையில் பணிபுரிந்த கு.மரியதேவ் ஆனந்த் திருவண்ணாமலை ஊரக வளா்ச்சி முகமைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

மேலும், திருவண்ணாமலை ஊரக வளா்ச்சி முகமையில் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வந்த அண்ணாதுரை கீழ்பென்னாத்தூருக்கும், கீழ்பென்னாத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வந்த பாண்டியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைக்கும் (நிா்வாகம்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT