திருவண்ணாமலை

தனி வட்டாட்சியா் பணியிடை நீக்கம்

3rd Jun 2023 12:35 AM

ADVERTISEMENT

 

கலசப்பாக்கம் வட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்தவா் மலா்கொடி (60). இவா், தண்டராம்பட்டு வட்டாட்சியராக பணிபுரிந்த போது முறைகேடாக தனி நபா்களுக்கு பட்டா வழங்கியதாக புகாா் எழுந்தது. இந்நிலையில், அவா் மீதான புகாா் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பணியிடை நீக்கம் செய்து புதன்கிழமை (மே 31) உத்தரவிட்டாா். இவா், இதே நாளில் பணி ஓய்வு பெற இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT