திருவண்ணாமலை

குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு

3rd Jun 2023 12:35 AM

ADVERTISEMENT

 

ஆரணி அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து முன்னாள் ஊராட்சித் தலைவா் குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு, அனுமதியின்றி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருகிறதாம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ராஜேந்திரன் தனது குடும்பத்துடன் குடிநீா்த் தொட்டி கட்டி வரும் இடத்தில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். மேலும், இதுகுறித்து ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் ராஜேந்திரன் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT