திருவண்ணாமலை

தொழிலாளிடம் பணம், கைப்பேசி பறிப்பு

3rd Jun 2023 12:32 AM

ADVERTISEMENT

 

செய்யாறில் முகவரி கேட்பது போல் நடித்து தொழிலாளிடம் பணம், கைப்பேசியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

செய்யாறு புது காஞ்சிபுரம் சாலையைச் சோ்ந்தவா் கிருஷ்ணா (26). மரப்பட்டறை தொழிலாளியான இவா் வியாழக்கிழமை இரவு காஞ்சிபுரம் சாலையில் சிறுநகா் அருகேயுள்ள சிறுபாலத்தின் வழியாக சென்றாராம். அப்போது, எதிரே முகக்கவசம் அணிந்தபடி வந்த 2 மா்ம நபா்கள் கிருஷ்ணாவிடம் முகவரி கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி கைப்பேசி, ரூ. 7,300 பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT