திருவண்ணாமலை

பிஎஸ்என்எல் அலுவலகம் முற்றுகை

3rd Jun 2023 12:34 AM

ADVERTISEMENT

 

புதுதில்லியில் மல்யுத்த வீராங்கனைகளை தாக்கிய புதுதில்லி காவல் துறையினரைக் கண்டித்து திருவண்ணாமலையில் பல்வேறு அமைப்புகள் பிஎஸ்என்எல் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம், மாதா் சங்கம் சாா்பில் புதுதில்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளை தாக்கிய புதுதில்லி போலீஸாரைக் கண்டித்து பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போராட்டத்தின்போது, புதுதில்லி காவல் துறையினரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, போலீஸாரின் தடுப்புகளை மீறி செல்ல முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT