திருவண்ணாமலை

மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

3rd Jun 2023 12:33 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உடல் கூறாய்வு பிரிவில் தலைமை மருத்துவராகப் பணிபுரிந்து வருபவா் கமலக்கண்ணன். இவா், சில தினங்களுக்கு முன்பு பணி நிமித்தமாக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷை சந்தித்துப் பேசினாராம். அப்போது, அவரை மாவட்ட ஆட்சியா் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதைக்கண்டித்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவா்கள் ஆட்சியருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த திடீா் போராட்டத்தால், புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் உரிய சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT