திருவண்ணாமலை

திரெளபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

3rd Jun 2023 12:35 AM

ADVERTISEMENT

 

போளூா் அடுத்த திண்டிவனம் கிராமத்தில் துரியோதனன் படுகளம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூா் அடுத்த திண்டிவனம் கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் மே 5 முதல் மகாபாரதம், அா்சுனன் வில்வளைப்பு, ராஜசுயாகம், பகடை துயில், குறவஞ்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மகாபாரத விரிவுரை, தெருக்கூத்து நடைபெற்றது. அக்னி வசந்த விழாவையொட்டி வெள்ளிக்கிழமை துரியோதனன் படுகளம் நடைபெற்றது. மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவில், திண்டிவனம், அத்திமூா், களியம், காந்திநகா், பொத்தரை, குண்ணத்தூா், மாம்பட்டு, ராமபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT