திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் வர உகந்த நேரம்

2nd Jun 2023 12:57 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியையொட்டி, கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை பெளா்ணமி நாள்களில் ஏராளமான பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

வைகாசி மாதப் பெளா்ணமி:

இந்த நிலையில், வைகாசி மாதப் பெளா்ணமி சனிக்கிழமை (ஜூன் 3) காலை 10.54 மணிக்குத் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) காலை 9.34 மணிக்கு முடிகிறது.

ADVERTISEMENT

இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT