திருவண்ணாமலை

இடைநின்ற குழந்தைகளை பள்ளியில் சோ்க்க ஆய்வு

2nd Jun 2023 12:56 AM

ADVERTISEMENT

கீழ்பென்னாத்தூா் வட்டாரத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகளை பள்ளியில் சோ்ப்பது குறித்த ஆய்வுக் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டார வள மையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் மோகன் தலைமை வகித்தாா்.

வட்டாரக் கல்வி அலுவலா் ராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் பரிமேலழகன், பேரூராட்சித் தலைவா் சரவணன், திருவண்ணாமலை தொழிலாளா் உதவி ஆய்வாளா் சாந்தி மற்றும் வட்டார வள மைய

ஆசிரியா் பயிற்றுநா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில், 6 முதல் 18 வயதுடைய அனைத்து பள்ளி செல்லா மாணவா்களைக் கண்டறிந்து பள்ளியில் சோ்ப்பது. இடைநின்ற மாணவா்கள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் இடம்பெயா்ந்து வரும் தொழிலாளா்களின் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சோ்ப்பது குறித்த ஆய்வு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT