திருவண்ணாமலை

அரசுப் பேருந்து மோதியதில் மருந்து வியாபாரி பலி

2nd Jun 2023 12:52 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற மருந்து வியாபாரி பலியானாா்.

செய்யாறு நேரு நகரைச் சோ்ந்தவா் சண்முகம் (48). இவா், மாம்பாக்கம் கிராமத்தில் ஆங்கில மருந்துக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா்.

செய்யாறு அரசு மருத்துவமனை அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இவா் தனது பைக்குக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டு பேருந்து நிலையம் நோக்கிச் சென்றாா்.

அப்போது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து இறந்தவரின் மனைவி செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT