திருவண்ணாமலை

ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் சங்கக் கூட்டம்

1st Jun 2023 01:25 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.தியாகராஜன் தலைமை வகித்தாா். மின்வாரிய ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.சந்தானம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவல்துறையினா் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.சிவலிங்கம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவா் பி.சாது ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் வி.ஆல்பிரட் வரவேற்றாா்.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.கங்காதரன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.தமிழ்ச்செல்வி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.

கூட்டத்தில், ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் கே.இளங்கோவன், கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைவா் மாதவ சின்ராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT