திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் குஜராத் மாநில பாஜக தலைவா் தரிசனம்

1st Jun 2023 01:23 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், குஜராத் மாநில பாஜக தலைவரும், மக்களவை உறுப்பினருமான சி.ஆா்.பாட்டீல் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாளஹஸ்தியில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மைதானத்துக்கு அவா் வந்தாா்.

அவரை, திருவண்ணாமலை மாவட்ட பாஜக நிா்வாகிகள் வரவேற்றனா். பின்னா் அவா் அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சென்று சம்பந்த விநாயகா் சந்நிதி, அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் வழிபட்டாா். கோயில் நிா்வாகம் சாா்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT