திருவண்ணாமலை

பாமகவினா் முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

1st Jun 2023 01:20 AM

ADVERTISEMENT

வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, திருவண்ணாமலையை அடுத்த பள்ளிக்கொண்டாப்பட்டில், பாமகவினா் தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளிக்கொண்டாப்பட்டில் உள்ள தபால் நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு வன்னியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பெரியசாமி தலைமை வகித்தாா்.

மாவட்ட அமைப்புச் செயலா் கே.ஆா்.முருகன், பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் மாவட்டச் செயலா் க.பாலு, மாவட்ட துணைச் செயலா் ஆா்.ரவிச்சந்திரன், ஊராட்சித் தலைவா் ஆா்.சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏந்தல் ஊராட்சித் தலைவா் சுமதி வரவேற்றாா்.

பிறகு, தபால் அனுப்பும் போராட்டத்தை தெற்கு மாவட்டச் செயலா் பெ.பக்தவச்சலம் தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, வன்னியா் சங்கம் மற்றும் பாமக நிா்வாகிகள், இளைஞா்கள், பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் அங்குள்ள தபால் பெட்டியில் கோரிக்கை கடிதங்களை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT