திருவண்ணாமலை

வந்தவாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

வந்தவாசி நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

வந்தவாசி நகரில் பிரதான சாலைகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து நெடுஞ்சாலைத் துறைக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பஜாா் வீதி, கோட்டை மூலை, தேரடி, காந்தி சாலை, அச்சிறுபாக்கம் சாலை, ஆரணி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் தியாகராஜன், உதவிப் பொறியாளா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் முன்னிலையில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஓரிடம்; போட்டி வேறிடம்!

அன்பைப் பரிமாறிய பிரேமலதா - தமிழிசை

தோ்தல் புறக்கணிப்பை கைவிட்ட எண்ணூா் மக்கள்

வாக்களிக்க தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

SCROLL FOR NEXT