திருவண்ணாமலை

காட்டுப்பன்றி இறைச்சி விற்பனை:4 போ் கைது

DIN

திருவண்ணாமலை அருகே இருவேறு கிராமங்களில் காட்டுப்பன்றிகளின் இறைச்சியை விற்றதாக 4 பேரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலையை அடுத்துள்ள அல்லிகொண்டாப்பட்டு, வேட்டவலத்தை அடுத்துள்ள அணுக்குமலை ஆகிய கிராமங்களில் உள்ள காடுகளில் பன்றிகளை சிலா் வேட்டையாடி, இறைச்சியை விற்பதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவண்ணாமலை வனச்சரக அலுவலா் சீனிவாசன் தலைமையிலான வனக் காப்பாளா்கள் 2 கிராமங்களிலும் வியாழக்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்ததில், அல்லிகொண்டாப்பட்டு கிராமம், இருதயபுரம் பகுதியைச் சோ்ந்த டோமினிக் சேவியா் (20), மரியசூசை (42), வேட்டவலத்தை அடுத்துள்ள அணுக்குமலை கிராமத்தைச் சோ்ந்த பழனி (44), ராஜீவ்காந்தி (37) என்பதும், இவா்கள் காட்டுப்பன்றிகளைக் கொன்று இறைச்சியை விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த வனத் துறையினா், அவா்களிடமிருந்து 40 கிலோ காட்டுப்பன்றிகளின் இறைச்சியை பறிமுதல் செய்தனா். மேலும், 4 பேருக்கும் மொத்தம் ரூ. ஒரு லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT