திருவண்ணாமலை

இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

DIN

போளூா் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கீழ்கரிக்காத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் முருகன் (24). இவா், பெங்களூரில் தனியாா் வங்கியில் பணியாற்றி வருகிறாா்.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் கீழ்கரிக்காத்தூா் கிராமத்துக்கு வந்த முருகன், தன் தாய் சமையல் உதவியாளராகப் பணியாற்றி வரும் பள்ளிக்கு அடிக்கடி சென்று வந்தாராம்.

அப்போது, அந்தப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு, மாணவியை அவா் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டாராம்.

மேலும், இதுகுறித்து யாருக்கும் தெரிவிக்கக்கூடாது எனவும் மாணவியை மிரட்டியதாகத் தெரிகிறது. அதனால், மாணவி நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு மாணவிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் மாணவியை பெற்றோா் அருகில் உள்ள கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது மாணவி கா்ப்பம் அடைந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் போளூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முருகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT