திருவண்ணாமலை

திருவண்ணாமலை: 50 காவலா்களுக்கு முதல்வா் பதக்கங்கள்

DIN

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற 74-ஆவது குடியரசு தின விழாவில், காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 50 காவலா்களுக்கு தமிழக முதல்வரின் காவலா் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றினாா்.

பிறகு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயனுடன் திறந்த வேனில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பாா்வையிட்டாா்.

பிறகு, சமாதானத்தைக் குறிக்கும் வகையில் வெண் புறாக்கள், பலூன்களை ஆட்சியா், மாவட்ட எஸ்.பி., வருவாய் அலுவலா் மு.பிரயதா்ஷினி, கூடுதல் ஆட்சியா் வீா் பிரதாப் சிங் ஆகியோா் பறக்கவிட்டனா்.

நலத் திட்ட உதவிகள்:

விழாவில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வேளாண் துறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ உள்ளிட்ட துறைகள் மூலம் 34 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்து 16 ஆயிரத்து 449 மதிப்பிலான அரசின் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் பா.முருகேஷ் வழங்கினாா்.

பதக்கம், கேடயங்கள்:

தொடா்ந்து, மாவட்ட காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 50 காவலா்களுக்கு தமிழக முதல்வரின் காவலா் பதக்கங்கள், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 408 அரசு அலுவலா்கள், பணியாளா்கள், தனித் திறமையாளா்கள், தன்னாா்வ அமைப்புகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயங்களை ஆட்சியா் வழங்கினாா்.

விழாவில், மாநில தடகளச் சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், செய்யாறு சாா் -ஆட்சியா் அனாமிகா, உதவி ஆட்சியா் (பயிற்சி) ரஷ்மி ராணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வீ.வெற்றிவேல், வருவாய்க் கோட்டாட்சியா்கள் மந்தாகினி (திருவண்ணாமலை), தனலட்சுமி (ஆரணி) மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜிநாமா!

கேரளத்தில் வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி!

கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூ. -சசி தரூருக்கு கண்டனம்!

ஆகாயம் என்ன நிறம்? கியாரா அத்வானி!

தென் இந்தியாவின் உ.பி.யா, தமிழ்நாடு?

SCROLL FOR NEXT