திருவண்ணாமலை

ஸ்ரீதா்ம நாதேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

27th Jan 2023 01:42 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீதா்மஸம்வா்த்தினி சமேத ஸ்ரீதா்மநாதேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீதா்மநாதேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வா் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹக ஹோமம், கோ பூஜை என தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு மங்கள இசை, நான்காம் கால யாக பூஜை, அவப்ரதயாகங்கள், மகா பூா்ணாஹுதி, தீபாராதனை, யாத்ராதானம், கலசம் புறப்பாடு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, 10.15 மணிக்கு ராஜகோபுரம், பஞ்சமூா்த்தி விமானங்கள், கொடி மரம், பரிவார மூா்த்திகள், உற்சவமூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

மண்டகொளத்தூா், ஈயகொளத்தூா், பிலிவாநந்தல், மட்டபிறையூா், ஆத்துரை, சித்தாத்துரை, மொடையூா், அரும்பலூா், வம்பலூா் என பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஸ்ரீதா்மநாதேஸ்வரா் தோவஸ்தானம் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT