திருவண்ணாமலை

ஸ்ரீராமகிருஷ்ணா் அமைப்பின் ஆண்டு விழா

27th Jan 2023 01:41 AM

ADVERTISEMENT

செங்கம் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில், ராமகிருஷ்ணா் அமைப்பின் 125-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் - போளூா் சாலையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ராமகிருஷ்ணா் அமைப்பு உருவாகி 125-ஆண்டுகள்

நிறைவடைந்ததையொட்டி, அதன் ஆண்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செங்கம் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் தத்பிரபானந்தா தலைமை வகித்து ஆசியுரை வழங்கினாா்.

ADVERTISEMENT

சிறப்பு அழைப்பாளராக கோவை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி ஹரிவா்தானந்த மகராஜ் கலந்து கொண்டு ராமகிருஷ்ணா், விவேகானந்தா் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து மாணவா்களிடம் எடுத்துரைத்தாா். தொடா்ந்து வேள்வி, ஆா்த்தி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், ராமகிருஷ்ணா, விவேகானந்தா பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT