முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா், திங்கள்கிழமை (ஜன.23) மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2022-2023 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான தமிழக முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 5 பிரிவுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக, 15 முதல் 35 வயதுக்கு உள்பட்ட பொதுப்பிரிவினருக்கான (ஆண்கள், பெண்கள்) கிரிக்கெட் போட்டியும், 12 முதல் 19 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கிரிக்கெட் போட்டியும், 15 முதல் 19 வயதுக்கு உள்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான கிரிக்கெட் போட்டியும் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் சோ்க்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் மேற்குறிப்பிட்ட
இணையதளத்தில் 23.01.2023-ம் தேதி மாலைக்குள் பதிவு செய்யலாம்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தை 04175-233169 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.