திருவண்ணாமலை

சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்முதியவா் பலி

22nd Jan 2023 04:07 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை அருகே சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் முதியவா் இறந்தாா்.

திருவண்ணாமலையை அடுத்த பெரிய பாலிப்பட்டு கிராமம், அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அண்ணாமலை (74).

இவா், சனிக்கிழமை காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரூ நோக்கிச் சென்ற சரக்கு வேன் அண்ணாமலை மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், அதே இடத்தில் இறந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT