எம்ஜிஆா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், வந்தவாசி கோட்டை மூலையில் அண்மையில் நடைபெற்றது.
வந்தவாசி தொகுதி அதிமுக சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஜெ.பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் ரெட்டியாா் தலைமை வகித்தாா்.
மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, ஒன்றியச் செயலா்கள் டி.வி.பச்சையப்பன், எம்.கே.ஏ.லோகேஸ்வரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் எம்.பாஷா வரவேற்றாா்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா்கள் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, முக்கூா் என்.சுப்பிரமணியன், சிறுபான்மை நலப் பிரிவு துணைச் செயலா் ஒய்.ஜவாஹா்அலி, தலைமை கழகப் பேச்சாளா் கே.எம்.கிருஷ்ணன், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் பி.ஜாகிா்உசேன் ஆகியோா் பேசினா்.